தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? (29-09-2026)

Chennai Today Gold Price Daily Gold Rates Gold
By Yashini Sep 29, 2026 09:25 AM GMT
Report

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த 25ஆம் தேதி தங்கம் விலை சற்று உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,010க்கும், ஒரு பவுன் ரூ.1,12,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து, நேற்று தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.13,665க்கும், ஒரு பவுன் ரூ.1,09,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது.

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? (29-09-2026) | Today Gold Price In Chennai

அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,09,120க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.13,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.