ஐந்து நாட்களாகத் தொடரும் தங்கம் விலை வீழ்ச்சி - இன்றைய நிலவரம் இதோ!
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் தினசரி கவனம் பெற்று வருகின்றது.
அந்த வகையில், அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சரிவுப் போக்கில் காணப்படுகிறது.

தங்கம் விலையில் தொடரும் சரிவு கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், நேற்றும் விலையில் சரிவு பதிவாகியிருந்தது.
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,235 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.175 குறைந்து ரூ.13,060 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480 ஆகப் பதிவாகியுள்ளது.

18 காரட் தங்கத்தின் விலையும் வீழ்ச்சி 22 காரட் தங்கத்தைப் போலவே, 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.10,690 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) 18 காரட் தங்கத்தின் விலை ரூ.1,160 குறைந்து ரூ.85,520 ஆக உள்ளது.
வெள்ளி விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.225 ஆகவும், ஒரு கிலோகிராம் வெள்ளி ரூ.2,25,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.