தொடர்ந்து குறையும் தங்க விலை - குஷியில் மக்கள்!

Today Gold Price Daily Gold Rates Gold
By Sumathi Feb 27, 2023 05:23 AM GMT
Report

 தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தங்க விலை

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது.

தொடர்ந்து குறையும் தங்க விலை - குஷியில் மக்கள்! | Today Gold Price 27 02 2023

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ 41,608 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.5,201 ஆக விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து ரூ. 69.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 69,000-க்கு விற்பனையாகிறது.