பொங்கல்: ஏறிய தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஷாக்!
பொங்கல் பண்டிகை வருவதை அடுத்து ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து ரூ.41,840 ஆக இருந்த நிலையில் இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூ.5,236 ஆக உள்ளது. இதேபோல் சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ரூ.41,888 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பண்டிகை காலத்தை முன்னிட்டு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் புத்தாண்டையொட்டி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 552 ரூபாய் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்று ரூபாய் 0.30 காசுகள் அதிகரித்து 74 ரூபாயாக இருந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது.