ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இல்லத்தரசிகள் கலக்கம்!
தங்கம் ரூ. 520 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வருகிறது. அதன்படி, 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து இன்று 5,752 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உயர்வு
அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 520 ரூபாய் வரை உயர்ந்து 46,016 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 உயர்ந்து 5,390 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.520 வரை உயர்ந்து 43,120 ரூபாய் என விற்பனையாகிறது.
இதே போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 72.00 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.