2 நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை - வாரத்தின் ஆரம்பமே இப்படியா.!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை இன்று (மார்ச் 13) சவரனுக்கு ரூ.432 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 உயர்ந்து ரூ.5,325க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி ஒரு கிராம் 80 பைசா உயர்ந்து, ரூ. 69.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,500 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.