சற்று குறைந்த தங்கம் விலை - நிலவரம் என்ன!
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,335 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 42,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,820 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது.
குறைவு
அதன் பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 70 காசுகள் குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 700 ரூபாய் குறைந்து 72,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.