சட்டென அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.
தங்கம் விலை
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. 2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தினம் முதல் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைவு
ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.72.50-க்கும்,
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ.72,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.