சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு - தலை சுற்றவைக்கும் தங்கம் விலை!
5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (நவ.22) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.57,800க்கும், கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,225க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் ஒரு சவரனுக்கு 2320 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.