வார முதலிலேயே குறைந்த தங்கம் விலை - எவ்வளவு பாருங்களேன்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.2) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.7,090க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan