சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா ?இன்றைய விலை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கம் விலை
சென்னையில் கடந்த சில நாட்களாகவே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது.

இது சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.13) சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.57,840க்கும் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று (டிச.13) கிராம் ரூ.101.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது.
மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு IBC Tamil