வார இறுதியில் குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்றைய (22.03.2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தங்கம்
பொருளாதாரத்தில் அசாதாரண சூழல்கள் நிலவுவதால், தங்கத்தை அனைவரும் பாதுகாப்பான முதலீடாகக் கருதி வாங்குகின்றனர்.இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இது சாமானிய மக்களை அதிகம் பாதித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.
நிலவரம்
இன்று (மார்ச் 22) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.8230-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.6795-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.