ஜெட் வேகத்தில் தங்கம் விலை - கலக்கத்தில் மக்கள்!

Tamil nadu Today Gold Price
By Sumathi Dec 28, 2023 06:44 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.28) அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,945 ஆகவும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 47,560 ரூபாயாகவும் உள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

24 காரட் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,415 ஆகவும், சவரன் விலை ரூ.51,320 ஆகவும் உள்ளது.

அதேபோல், கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.81 ஆகவும், கிலோவுக்கு ரூ. 300 உயர்ந்து ரூ.81,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.