தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் - விலை நிலவரம் என்ன?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
தங்கம்
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.
அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை ரூபாய் 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 5, 580 என விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூபாய் 160 உயர்ந்து ரூ. 44,640 என விற்பனையாகி வருகிறது.
தொடர் விலை உயர்வு
24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6110.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48880.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.