தொடர்ந்து குறையும் தங்க விலை - வாங்குறதுக்கு நல்ல சான்ஸ்.!
தங்கம் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வந்த நிலையில் இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.
குறைவு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.100 குறைந்து 5,470 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.800 வரை உயர்ந்து ரூ.43,760 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 74.00 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.