ரூ.44,000 கீழ் குறைந்த தங்கம் விலை - மக்களே.. இதுதான் சரியான நேரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,480 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து 4489 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.35,912 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ரூ.1 குறைந்து கிராம் ரூ.77.00 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil