ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

Silver Gold
By Vinoja Nov 27, 2026 05:55 AM GMT
Report

Today Gold Rate: இன்று நவம்பர் 27 ஆம் திகதி தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.15,360 வரை குறைந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம்! | Today Gold And Silver Price In Chennai

நேற்று (நவம்பர் 26) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம் 

அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.92,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம்! | Today Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.9,495-க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.75,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம்! | Today Gold And Silver Price In Chennai

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.170-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


மாவீரர் நாள் - 27 நவம்பர் | சிறப்பு நேரடி ஒளிபரப்பு