மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை.., சென்னையில் இன்று எவ்வளவு?
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களில் ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுகிறது.
மார்ச் 23ஆம் தேதி ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. காலை மற்றும் மாலை நேரங்களில் விலை குறைந்திருந்தாலும், பின்னர் திடீரென உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதியும் காலை குறைந்த தங்கம் விலை, மாலை நேரத்தில் மீண்டும் உயர்ந்தது.

நேற்று, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.350 உயர்ந்து ரூ.13,600 ஆகவும், ஒரு சவரன் ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதாவது, ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.13,670 ஆகவும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.260 மற்றும் ஒரு கிலோ ரூ.2,60,000 ஆக உள்ளது.