தொடர் சரிவில் தங்கம் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு?

Chennai Today Gold Price Daily Gold Rates Gold
By Yashini Mar 18, 2026 05:59 AM GMT
Report

இஸ்ரேல்– ஈரான் போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதன் தாக்கமாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூட தங்கம் விலை மாற்றப்பட்டது என்பது வரலாற்றில் முதல் முறை.

இந்நிலையில், கடந்த 3, 4 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு? | Today Gold And Silver Price In Chennai

நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,650 ஆகவும், சவரன் ரூ.480 குறைந்து ரூ.1,17,200 ஆகவும் விற்பனையானது.

அந்தவகையில், இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,570 ஆகவும், சவரன் ரூ.640 குறைந்து ரூ.1,16,560 ஆகவும் உள்ளது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.12,240 ஆகவும், சவரன் ரூ.720 குறைந்து ரூ.97,920 ஆகவும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் குறைந்து, ஒரு கிராம் ரூ.275 மற்றும் ஒரு கிலோ ரூ.2,75,000 ஆக உள்ளது.