போர் எதிரொலி.., அதிரடியாக குறைந்த தங்க விலை

Chennai Today Gold Price Daily Gold Rates Gold
By Yashini Mar 02, 2026 05:47 AM GMT
Report

2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில், இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகள் சரிவடைந்தன.

இதனால் மார்ச் 1ஆம் தேதியான நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

போர் எதிரொலி.., அதிரடியாக குறைந்த தங்க விலை | Today Gold And Silver Price In Chennai

அந்தவகையில், இன்று மார்ச் 2ஆம் தேதி தங்கம் விலை திடீரென குறைந்தது.

அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660 ஆகவும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,400 ஆகவும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,200 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.315 ஆகவும், ஒரு கிலோ ரூ.3,15,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.