மீண்டும்.. மீண்டுமா.. தங்கம் விலை உயர்வு - இன்றைய நிலவரம்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.14) அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 5,820 ஆகவும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ. 46,520 ரூபாயாகவும் உள்ளது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.98 உயர்ந்து ரூ.4,767 ஆகவும், சவரனுக்கு ரூ.784 உயர்ந்து ரூ. 38,136 ரூபாயாகவும் உள்ளது.
வெள்ளி விலை கிராம் ரூ.79.00க்கும், கிலோ ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.