தொடர்ந்து சரிந்த நிலையில் திடீரென ஏறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த மாதத்தில் இல்லாத அளவு நேற்று ஒரு கிராம் ரூ. 5201 என விற்பனையான தங்கம் விலை,
உயர்வு
இன்று சற்று உயர்ந்துள்ளது 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6 அதிகரித்து இன்று 5,569 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 48 ரூபாய் வரை அதிகரித்து 44,552 ரூபாய் என விற்பனையில் உள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6 அதிகரித்து 5,207 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் வரை குறைந்து 41,656 ரூபாய் என விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 69.20 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 69,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.