தொடர்ந்து 5வது நாளாக குறைந்த தங்கம் விலை - மக்கள் மகிழ்ச்சி!

Chennai Today Gold Price Daily Gold Rates Gold
By Sumathi Feb 17, 2023 08:01 AM GMT
Report

கடந்த 4 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது.

தங்கம் விலை

கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த 4 நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பங்குச்சந்தையும் ஏற்றம் கண்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

தொடர்ந்து 5வது நாளாக குறைந்த தங்கம் விலை - மக்கள் மகிழ்ச்சி! | Today Gold And Silver Price 17 2 2023

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 30 குறைந்து இன்று 5,612 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 240 ரூபாய் வரை குறைந்து 44,896 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சரிவு

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,250 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் வரை குறைந்து 42,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 71.20 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 71,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.