அதிரடியாக சரிந்த தங்கம் விலை - நகை வாங்க சரியான நேரம் இதுதான்.!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, இன்று விலையில் சரிவை கண்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,535 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280 ஆகவும் விற்பனையாகிறது.
சரிவு
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து 4,534 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை குறைந்து ரூ.36,272 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது.