Friday, Jun 20, 2025

வருஷ கடைசியில் சரமாரியாக சரிந்த தங்கம் விலை - இப்போது வாங்கலாமா?

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi 6 months ago
Report

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.31) விலை குறைந்துள்ளது.

குறைவு

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 56,880 -க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 7,110 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5875க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.47,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராம் ரூ.2 குறைந்து ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையாகிறது.