ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; ரூ.47 ஆயிரத்தை தொட்டது - கலக்கத்தில் மக்கள்!

Tamil nadu Today Gold Price
By Sumathi Dec 23, 2023 06:43 AM GMT
Report

ஒரு சவரன் தங்கம் ரூ. 47 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.23) அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 5,875 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 47,000 ரூபாயாகவும் உள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ. 4,813 ஆகவும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ. 38,504 ரூபாயாகவும் உள்ளது.

வெள்ளியின் விலை கிராம் ரூ. 80.50க்கும், ஒரு கிலோ ரூ. 80,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.