தங்கம், வெள்ளி - விலையை கேட்டால் தலையே சுத்தும்!
தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.17) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.12,500க்கும், சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்து ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியும் கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து, ரூ.223க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.2.23 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.