தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,23,029ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,332, சென்னையில் 2,467 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 490 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31,673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 18,02,176 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,96,131 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1,56,839 பேருக்கு க கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.