தொடர்ந்து உயர்ந்து பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

rate petrol diesel hike
By Anupriyamkumaresan Oct 29, 2021 05:11 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசு அதிகரித்து 105 ரூபாய் 43 காசாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 34 காசு அதிகரித்து 101 ரூபாய் 59 ஆக விற்பனையாகிறது.

இதற்கிடையே சற்று ஆறுதல் தரும் செய்தியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 வாரங்களில் இல்லாத அளவு குறைந்து பீப்பாய்க்கு 82 டாலராக உள்ளது.

தொடர்ந்து உயர்ந்து பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | Today Chennai Petrol Rate Hike

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வினியோகம் தொடங்கும் அறிகுறி ஏற்பட்டுள்ளதாலும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பும் விலை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இவ்விலை குறைவு தொடரும் பட்சத்தில் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. இதற்கிடையே கச்சா எண்ணெய் விலையை குறைப்பதற்காக சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளது.