வார இறுதியில் எகிறிய தங்கம் விலை; நகை வாங்க போறீங்களா? தெரிஞ்சுக்கோங்க!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,555-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,440-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் 48,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை 0.30 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.78.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.78,500 ஆக இருக்கிறது.