11வது நாளாக தங்கம் விலை அதிரடி குறைவு - மக்களே மிஸ் பன்ணிராதீங்க..
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,180க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ. 125க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,25,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
