வார இறுதியில் சரமாரியாக உயர்ந்த தங்கம் விலை - கலக்கத்தில் நகைப்பிரியர்கள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.17) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ. 6,670க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ. 91க்கும், கிலோ வெள்ளி ரூ.91,000க்கும் விற்பனையாகிறது.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan