தங்கம் விலை நிலவரம் - இப்போது நகை வாங்கலாமா?

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Aug 15, 2024 05:33 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.15) விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

இன்றைய நிலவரம்

அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ. 6,555க்கும், சவரன் ரூ.52,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.88.50க்கும் ஒரு கிலோ ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.