சில மணிநேரத்தில் +2 ரிசல்ட் : எங்கு, எப்படி, எதில் பார்க்கலாம்?

By Irumporai May 08, 2023 03:05 AM GMT
Report

இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

  தேர்வு முடிவுகள்

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 10 முதல் 21 வரையில் திருத்தும் செய்யப்பட்டது. அதன்பிறகு, குறிப்பிட்டபடி இன்று (08-05-2023) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாக உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை அறிய மாணவர்கள் பதிவெண் மற்றும், அவர்களின் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம். 

நேரடியாக குறுஞ் செய்தி

இந்த மதிப்பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரதான அரசு நூலகங்கள், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் ஆகிய இடங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்தந்த மாணவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் மதிப்பெண்கள் அனுப்பப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.