அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து 5,650 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து 4,628 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 குறைந்து ரூ.37,024 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000 எனவும் விற்பனையாகிறது.