தொடர்ந்து வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,360.க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 5545க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.80,700க்கும், கிராம் ரூ.80.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil