ஒரேயடியாக உயர்ந்த தங்கம் விலை - இதோ இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ரூ. 5480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் விலை ரூபாய் 112 உயர்ந்து ரூ. 43,840-க்கு விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80.000-க்கு விற்பனையாகிறது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan