தங்க நகை வாங்கலாமா? ரேட் எப்படி இருக்கு - இன்றைய நிலவரம்!

Today Gold Price
By Sumathi Aug 16, 2023 05:50 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை 

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

தங்க நகை வாங்கலாமா? ரேட் எப்படி இருக்கு - இன்றைய நிலவரம்! | Today Agust 16 Gold And Silver Price

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.

குறைவு

அதன்படி, இன்று (ஆகஸ்ட் 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5,495 ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 43,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராம் 5,965 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 47,720 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராம் ரூ. 76.20 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 76,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.