சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

TVK
By Fathima Aug 06, 2026 04:31 AM GMT
Report

சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை புகழ்ந்து பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வினோத், வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது.

நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது. வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்படவுள்ளது.