இன்றைய முக்கிய செய்திகள் - 27.3.2025

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Mar 27, 2025 02:20 AM GMT
Report

  டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டம்; தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இன்றைய முக்கிய செய்திகள் - 27.3.2025 | Today 27 03 2025 Important Top News

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை; காங்கேசன் துறைக்கு அழைத்துச்சென்று விசாரணை

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்வர்

டெல்லி புறப்பட்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை; அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்தித்த நிலையில் பயணம்

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை வழங்கவில்லை என குற்றச்சாட்டு;மத்திய அரசை கண்டித்து வரும் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்