இன்றைய முக்கிய செய்திகள் - 25.3.2025
அதிமுகவை இஸ்லாமியர்கள் மன்னிக்க மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்;வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்போம் எனவும் திட்டவட்டம்.
உ.பி-ல் நோட்டீஸ் வழங்கி 24 மணி நேரத்தில் வீடுகளை இடித்த பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்; நாக்பூரிலும் புல்டோசர் நடவடிக்கைக்கு மும்பை உயர்நீதிமன்றம் அதிருப்தி.
தமிழ்நாட்டில் கே.வி. பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என ஒன்றிய அரசு தகவல்; மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக கனிமொழி காட்டம்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜனநாயகன்' திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு.
ஐ.பி.எல். போட்டியில் லக்னோவிற்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி; 31 பந்துகளில் 66 ரன்கள் அடித்த அசுதோஷ் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு.