இன்றைய முக்கிய செய்திகள் -22-03-2025

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Mar 22, 2025 02:15 AM GMT
Report
  •     சென்னையில் இன்று கூடுகிறது தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம். முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வருகையால் தேசிய அளவில் கவனம் பெறும் தமிழ்நாடு. 

இன்றைய முக்கிய செய்திகள் -22-03-2025 | Today 22 03 2025 Important Top News

  • அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை ஒன்றிணைந்து முறியடிப்போம். சென்னை வந்துள்ள பல்வேறு மாநில கட்சித் தலைவர்கள் உறுதி.
  •  18-வது ஐ.பி.எல். போட்டிகள் கொல்கத்தாவில் இன்று கோலாகல தொடக்கம். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.
  • சென்னையில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. தன்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை என எடப்பாடி பழனிசாமி பேச்சு.
  •   அதிமுகவின் கணக்குகளை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என எடப்பாடி பழனிசாமி பதில்.
  • மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்
  •  தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்ள கேரளா, பஞ்சாப், தெலங்கானா மாநில முதல்வர்கள் சென்னை வருகை; பாஜகவின் கூட்டணி கட்சியான ஜனசேனாவும் கூட்டத்தில் பங்கேற்கிறது
  •  மக்களின் கோபத்தை மடைமாற்ற மெகா நாடகத்தை திமுக அரங்கேற்றுவதாக அண்ணாமலை விமர்சனம்; பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு
  •   ஊழலை மறைக்கவே சிலர் மொழி அரசியல் செய்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்; மாநில மொழி பேசுபவர்களான தாங்கள் அவற்றை எப்படி எதிர்ப்போம் என்றும் கேள்வி