2 நாட்களாக சரிந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Jun 18, 2025 06:10 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூன் 18) விலை அதிகரித்துள்ளது.

உயர்வு

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ரூ.9,250-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

18 காரட் தங்கம் கிராம் ரூ.7,615-க்கும், சவரன் ரூ.60,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் ரூ.2 உயர்ந்து கிராம் ரூ.122-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,22,000-க்கும் விற்பனையாகிறது.