இன்றைய முக்கிய செய்திகள் - 17-03-2025

Tamil nadu India World
By Sumathi Mar 17, 2025 05:00 AM GMT
Report

இன்றைய (17/03/2025) முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

important news today

  •  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
  • டாஸ்மாக் முற்றுகை போராட்டம் எதிரொலி - வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாஜகவின் தமிழிசை, வினோஜ் பி. செல்வம்
  • அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஏமனில் 53 பேர் பலி
  • 1 மாதத்துக்கு பிறகு முதல் முறையாக போட்டோவை வெளியிட்ட வாட்டிகன்!
  • கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.
  • தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680க்கும், கிராம் ரூ.8,210க்கும் விற்பனையாகிறது.
  • ஊடகங்களை நேருக்கு நேர் சந்திக்க அச்சம் கொண்டவர் - பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்