இன்றைய முக்கிய செய்திகள் - 12.03.2025

Tamil nadu India World
By Sumathi Mar 12, 2025 05:42 AM GMT
Report

இன்றைய (12/03/2025) முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

top news today

  • கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,520க்கும், ஒரு கிராம் ரூ.8,065க்கும் விற்பனை
  • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக 00 டோக்கன்களுக்கு பதிலாக இன்று 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்: இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்
  • உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும், விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
  • தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று (மார்ச் 12) கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
  • இங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமையவுள்ளது.
  • ரஷியாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.