இன்றைய முக்கிய செய்திகள்: 11-03-2025
இன்றைய (11/03/2025) முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்கள் தமிழ் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரை கிளை
* தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்டெடுப்போம் - எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை
* தூத்துக்குடி மாவட்டத்தில், பரீட்சை எழுத பேருந்தில் சென்ற பிளஸ்-1 மாணவரை தாக்கிய சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* பால் சப்ளைக்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு - ஆவின் உறுதி
* தேனி வியாபாரியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.24 லட்சம் கொள்ளை பங்குனி மாத பூஜைக்காக 14-ந்தேதி நடை திறப்பு - சபரிமலை கோவிலில் தரிசன முறையில் மாற்றம்
* கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழாவின் தீர்த்தவாரியை ஒட்டி, மார்ச் 12ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
* மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 218 புள்ளிகள் சரிந்து 74116 புள்ளிகள் என வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92 புள்ளிகள் உயர்ந்து 22460 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
* கனடாவில் அக்டோபர் மாதம் அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதுவரை புதிய பிரதமராக மார்க் கார்னே நீடிப்பார்.