சிம்புவின் மாநாடு படத்திற்கு புதிய சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Petchi Avudaiappan Nov 27, 2021 09:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

மாநாடு திரைப்படம் குறித்து தமிழக சுகாதாரத் துறையிடம் Tobacco Montior என்ற அமைப்பு புகார் அளித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த படம் பல பிரச்சனைகளுக்கு நடுவே கடந்த 25 ஆம் தேதி வெளியாக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் Tobacco Montior என்ற அமைப்பு மாநாடு திரைப்படத்தின் மீது புகார் அளித்துள்ளது.  

அதில் மாநாடு திரைப்படம் மற்றும் யூடியூபில் உள்ள டீசர்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா புகை பிடிக்கும் காட்சியில் 'புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என்ற எச்சரிக்கை வாசம் இல்லை எனத் தமிழக சுகாதாரத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த புகாரில், "புகை பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு காட்சியில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும்போது, குழந்தைகளும் இளைஞர்களும் அதில் எளிதாக ஈர்க்கப்படுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. 

அப்படி இருக்கும் போது, மாநாடு திரைப்படத்திலும் யூடியூபில் உள்ள டீசர்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா புகை பிடிக்கும் காட்சியில் 'புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என்ற எச்சரிக்கை வாசம் இல்லை. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை புகாரை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.