உரம் கொடுத்து உதவுங்கள் : இந்தியாவிற்கு கோரிக்கை வைக்கும் இலங்கை

By Irumporai Jun 03, 2022 12:09 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.

உரம் கொடுத்து உதவுங்கள் : இந்தியாவிற்கு கோரிக்கை வைக்கும் இலங்கை | To Give Fertilizer Help Sri Lanka Demands India

அப்போது உணவுப் பாதுகாப்பு மற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா உரம் கொடுத்து உதவுமாறு அப்போது மகிந்த அமரவீரா கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா கடந்த மாதம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.