உலகில் மிகவும் 'சுத்தமான காற்றை' சுவாசிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

United States of America Norway Australia World
By Jiyath Sep 26, 2023 06:13 AM GMT
Report

உலகில் மிகவும் சுத்தமான காற்று உள்ள இடங்கள் குறித்த தகவல். 

சுத்தமான காற்று

சுத்தமான காற்று என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும், உயிர் வாழ்வதற்கும் மிக அவசியமான ஒன்று. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசடைந்து உள்ளது.

உலகில் மிகவும்

மனிதர்களே இயற்கையை அழித்து சுத்தமான காற்றையும் மாசடையச் செய்கிறார்கள். இதனால் சுத்தமான காற்றை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது. அந்த வகையில் "ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த டஸ்மேனியா என்ற தீவு மாநிலத்தின் வடமேற்கு முனையில் 'கேப் க்ரிம்' என்ற தீபகற்ப பகுதி உள்ளது. இது "உலகின் முனை" (Edge of World) என்று அழைக்கப்படுகிறது.

அன்டார்டிகாவிலிருந்து எந்தவிதமான அசுத்தமும் இல்லாத காற்று மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு வந்து சேருகிறது. இந்த இடம் உலகின் பிற பகுதிகளிலுருந்து தொலைதூரமாகவும், சுற்றுலாப் பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும் பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து காற்று இங்கு வந்தடைகிறது.

சுத்தாமன் காற்றுள்ள இடங்கள்

இதனால் இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என்று காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர். ஆன் ஸ்டேவர்ட் தெரிவித்துள்ளார்.

உலகில் மிகவும்

இதேபோல சுத்தமான காற்று உள்ள உலகின் பிற தளங்கள் "அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஹவாய் தீவு மாநிலத்தில் உள்ள மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு மற்றும் அண்டார்டிக்காவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் பகுதியில் ஸ்பிட்ஸ்பர்கன் தீவில் உள்ள நை-அலெசுண்ட் ஆகிய ஆகும்.

தற்போது இத்தீவிலிருந்து கொள்முதல் செய்த காற்று என விளம்பரம் செய்து "டஸ்மேனிய காற்று" என பெயரிடப்பட்டு பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.