தமிழக பெண் காவலர்களுக்கு அடித்த ஜாக்பாட் - முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் குற்றங்கள் நிகழாமல் ஒவ்வொரு காவலரும் தடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்
காவல்துறையினர்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார் . பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
தொடர்ந்து விழாவில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,
முதல்வர் ஸ்டாலின்
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை,ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை, தடய அறிவியல் துறை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 459 காவலர்களுக்கு வழங்கப்பட்டன.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ,''ஓராண்டு மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், பெற்றோர் அல்லது கணவர் வசிக்கும் ஊரிலேயே பணியாற்றும் சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் குற்றங்கள் நிகழாமல் ஒவ்வொரு காவலரும் தடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.